சிறுவர்களை சாட்சியாளர்களாக நீதிமன்றுக்கு அழைப்பதை தவிர்க்க விசேட திட்டம் – சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவிப்பு!
Friday, October 1st, 2021
குற்றவியல் வழக்குகள் போன்ற விசாரணைகளின்போது சிறுவர்களை சாட்சியாளர்களாக நீதிமன்றத்திற்கு அழைப்பதை தடுக்கும் சட்டத்தையடுத்து, காணொளி தொழில்நுட்பம்மூலம் சிறுவர்களிடம் தகவல்ளைப் பெற்றுக்கொள்வதற்கான விசேட கூடம் இன்று(01) திறந்து வைக்கப்படவுள்ளது.
சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன, அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இதனைத் தெரிவித்துள்ளார்.
சிறுவர் உரிமைகளை உறுதிப்படுத்துவதற்காக எதிர்காலத்தில் சிறுவர்கள் தொடர்பான குற்றவியல் வழக்குகளின்போது நபர்களின் சாட்சியங்களை விடவும் விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப சாட்சியங்களைப் பயன்படுத்துவதற்கு எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
கொஸ்கம பிரதேசத்திற்கு விசேட பாதுகாப்பு ஏற்பாடு: எஸ்.எம். விக்ரமசிங்க!
இன்றும் இரவும் 10 மணிமுதல் ஊரடங்கு சட்டம்!
வல்லமை மிக்க தலைவர்களை தமிழ் மக்கள் பலப்படுத்தி பயன்பெற வேண்டும் - K2 அக்றோ ஜம்போ நட்ஸ் உற்பத்தி நி...
|
|
|


