சிறுவர்களின் போஷாக்கு மட்டம் குறித்து ஆராய நாடாளுமன்றால் விசேட குழு நியமனம்!

Monday, March 27th, 2023

நாட்டில் சிறுவர்கள் மத்தியில் போஷாக்கின்மை ஏற்பட்டுள்ளதா என்பது தொடர்பில், ஆராய நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தலைமையிலான விசேட குழு நாடாளுமன்றால் நியமிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலைகள் கடந்த காலங்களில் அதிகரித்தது.

இதன் காரணமாக இலங்கையில் பாதி குடும்பங்கள் தங்களுடைய குழந்தைகளுக்கான முறையான உணவு வழங்குதலை குறைத்திருந்ததாக ஆய்வுகளில் தகவல்கள் வெளியிடப்பட்டன.

இதனிடையே இலங்கையில் சிறுவர்களிடத்தில் போஷாக்கு தன்மை குறைந்துள்ளதா என ஆராய்வதற்கும், அதற்காக எடுக்கப்படக்கூடிய குறுகிய, மத்திய மற்றும் நீண்ட கால நடவடிக்கைகள் குறித்த பரிந்துரைகளை முன்வைப்பதற்கும் இந்த விசேட குழு நியமிக்கப்பட்டுள்ளது.

குறித்த குழுவில் நளின் பெர்னாண்டோ, அரவிந்த குமார், சிவஞானம் ஸ்ரீதரன், சீதா அரம்பேபொல சுதர்ஷினி பெர்னாண்டோ புள்ளே, அலிசப்ரி ரஹீம், சரித்த ஹேரத், ஜகத் சமரவிக்ரம, கயஷான் நவந்தன, கிங்ஸ் நெல்சன் உள்ளிட்ட சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்வாங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: