சிறுவர்களிடையே கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரிப்பு – வைத்தியர் தீபால் பெரேரா எச்சரிக்கை!
Saturday, November 6th, 2021
கடந்த ஒரு வாரமாக குறிப்பாக கடந்த சில நாட்களாக சிறுவர்களிடையே கொவிட் 19 தொற்று பரவலானது அதிகரித்துள்ளதாக லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் குழந்தை நல மருத்துவரான வைத்தியர். தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
அத்துடன் சிறுவர்களைப் பாதுகாத்து பாடசாலைக் கல்வி முறையை முன்னெடுத்துச் செல்வதே அன்றி சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்வதல்ல எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேநேரம் சிறுவர்கள் மத்தியில் இந்நோய் பரவல் மேலும் அதிகரித்தால் மீண்டும் பாடசாலைகளை மூட வேண்டிய நிலை ஏற்படலாம் எனவும், சிறுவர்களை பாதுகாத்து அவர்களின் கல்வியை தொடர ஆதரவு வழங்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன் தேவையற்ற பயணங்களை கைவிடுமாறும், சிறுவர்களையும் அவர்களின் கல்வியையும் பாதுகாக்க மக்கள் முயற்சி செய்ய வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
குடியிருப்பு நிலங்களுக்கான உரிமங்களை பெற்றுத்தாருங்கள் - ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியிடம் சங்கிலியன் தோ...
யாழ்ப்பாணத்தில் தைபொங்கல் பொருள் கொள்வனவில் மக்கள் ஆர்வம் காட்டவில்லை - வியாபாரிகள் கவலை !
உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் வசந்தகால கூட்டங்களில் சீன உயர் அதிகாரிகள் கலந்துகொள்வார்க...
|
|
|


