சிறுமிக்குத் தலைக்கவசம் அணிவிக்காததால் மாமனாரையும் குற்றவாளியாக்கி  வழக்குத் தொடுத்தனர் பொலிஸார் !

Thursday, February 8th, 2018

புங்குடுதீவு மகாவித்தியாலயம் அருகில் கடந்த மாதம் 24 ஆம் திகதி ஏற்பட்ட  விபத்தில் புங்குடுதீவு ரோமன் கத்தோலிக்க பாடசாலையில் கல்வி கற்ற மாணவி உயிரிழந்தார். இந்த வழக்கு ஊர்காவற்றுறை நீதிமன்றில் நீதிவான் ஏ.எம்.எம்.றியாழ் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது அதன்போது மாணவியை பாடசாலைக்கு ஏற்றிச் சென்ற மாணவியின் மாமனாரையும் பொலிஸார் கைது செய்து வழக்கில் சந்தேக நபராக இணைந்திருந்தனர் விசாரணையின் போது நீதிவானால்

 “குற்றத்திற்கு உடந்தை அளித்தவர்களை அந்தக் குற்றத்துடன் தொடர்புடையவர்கள் என்று சந்தேக நபர்களாக வழக்கில் இணைக்கலாம்.  ஆனால் மாமனார் எந்த அடிப்படையில் வழக்கில் இணைக்கப்பட்டார்  என்று கேட்கப்பட்டது.

மாணவிக்குத் தலைக்கவசம் அணியாது மோட்டார்சைக்கிளில் ஏற்றிச் சென்றமையால் வழக்கில் இணைத்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

தலைக்கவசம் அணியாமையால் வழக்கில் இணைத்துள்தாகப் பொலிஸார் தெரிவித்தனர் .

“தலைக்கவசம் அணியாது அழைத்துச் சென்றமை தனி வழக்காக பதிவு செய்யப்பட வேண்டுமே தவிர விபத்து வழக்கில் விபத்தை ஏற்படுத்தி உயிரிழப்பை விளைவித்த குற்றச்சாட்டில் சந்தேக நபர்களில் ஒருவராக அவரை இணைக்க முடியாது என்று நீதிவான் பொலிஸாரிற்கு கண்டிப்புடன் அறிவுறுத்தலையும் வழங்கினார்.

Related posts:

டெங்கு - கொரோனா நோய்களின் அறிகுறிகள் ஒரே மாதிரியானவை - மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு தேசிய டெங்க...
பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பில் வெளியானது விசேட சுற்றறிக்கை - மாணவர்கள் தொற்றுடன் அடையாளம் - பாடசால...
கற்பனையில் பற்றாக்குறை பற்றி பேசுகிறார்களா என்று எமக்கு தெரியவில்லை - போதுமான அளவு இருப்பு உள்ளது என...