சிறுபான்மையினருக்கு எதிரான செயற்பாடுகளை கட்டுப்படுத்த ஜனாதிபதி தலைமையில் விசேட கூட்டம்!
Saturday, December 3rd, 2016
அண்மைக்காலமாக சிறுபான்மையினருக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயும் விசேட சந்திப்பொன்று எதிர்வரும் செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெறவுள்ளது.
குறித்த சந்திப்பு ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெறவுள்ள நிலையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் சந்திப்பில் கலந்துகொள்ளவுள்ளார்.
அச்சந்திப்பின்போது நாட்டில் செயற்படும் அடிப்படைவாதக் குழுக்கள் தொடர்பிலும் அதனால் சமுகங்கள் மத்தியில் ஏற்படும் சிக்கல் நிலை சம்பந்தமாகவும் ஆராயப்படவுள்ளன. மேலும் இச்சந்திப்பில் சகல சமூகங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் சமயத் தலைவர்களும் கலந்துகொள்ளவுள்ளனர்.
இதேவேளை நாட்டில் சிறுபான்மையினருக்கு எதிரான கலவரம் ஒன்றை ஏற்படுத்துவதற்கு சில தரப்பு பிரயத்தனம் மேற்கொள்வதாக அண்மையில் பரவலாக குற்றம் சாட்டப்பட்டது. ஆகவே அவ்வாறான நடவடிக்கையின் பின்னால் உள்ள சக்திகள் பற்றியும் குறித்த சந்திப்பில் அவதானம் செலுத்தப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts:
|
|
|


