சிறப்பாக நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க, துன்னாலை வல்லிபுர ஆழ்வார் ஆலய வருடாந்த தேர்த்திருவிழா !

Thursday, September 28th, 2023

வரலாற்றுச் சிறப்புமிக்க வடமராட்சி, துன்னாலை வல்லிபுர ஆழ்வார் ஆலய வருடாந்த தேர்த்திருவிழா இன்று(28) இடம்பெற்றது.

இன்றைய தேர்த்திருவிழாவில் நாட்டின் பல பாகங்களிலும் இருந்தும் பக்தர்கள் ஆலயத்திற்கு வருகை தந்து தமது நேர்த்திக் கடன்களை நிறைவேற்றி வழிபாடு செய்தனர்.

அந்தவகையில், வல்லிபுர ஆழ்வாரிடம் வரம் வேண்டி பெண்ணொருவர் பத்திற்கும் மேற்பட்ட கற்பூர சட்டிகளை கையில் ஏந்தியும் தலையில் சுமந்தவாறும் வழிபாட்டில் ஈடுபட்டார்.

இந்நிலையில் குறித்த படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: