சிரியாவில் நச்சுவாயுத் தாக்குதலால் பலர் பாதிப்பு!

சிரியாவின் டமாஸ்கஸ் பிராந்தியப் பகுதிகளில், சிரிய படையினர் நச்சுவாயுவைப் பயன்படுத்தி தாக்குதல்களை நடத்தி வருவதாக சிரியாவின் கிழக்கு கோட்டா பகுதியில் மருத்துவ பணிகளில்ஈடுபட்டுள்ள சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனால் அங்கு சிறார்களும், பெண்களும் சுவாசிப்பதற்கும் சிரமத்தை எதிர்கொண்டிருப்பதாகவும் ஒரு குழந்தை இறந்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
படையினர் கிழக்கு கோட்டா பகுதியில் பல்வேறு முனைகளிலும் தாக்குதல்களை நடத்தி வருகின்ற நிலையில், குறித்த நச்சுவாயு பயன்பாடு பற்றிய தகவலும் வெளியாக்கப்பட்டுள்ளது.
இதேவேளை ரஷ்யாவின் பின்புலம் கொண்ட சிரிய வான்படையினர் நடத்திய தாக்குதலில் 27 பேர் பலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐ.நா பாதுகாப்பு சபையில் சிரியாவில் 30 நாட்களுக்கு மோதல் தவிர்ப்பை அமுலாக்குவதற்கான தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளபோதும், தொடர்ந்தும் அங்கு தாக்குதல்கள்நடத்தப்படுவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
Related posts:
|
|