சின்ன வெங்காயத்தின் விலை தொடர்ந்தும் அதிகரிப்பு – அதனை கொள்வனவு செய்யும் அளவுக்கு தம்மிடம் பணமில்லை எனவும் நுகர்வோர் கவலை!

Wednesday, January 6th, 2021

சின்ன வெங்காயத்தின் விலை கடுமையாக அதிகரித்துள்ளதால், சின்ன வெங்காயத்தை பயன்படுத்த முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக நுகர்வோர் கவலை தெரிவித்துள்ளனர்.

ஒரு கிலோ கிராம் சின்ன வெங்காயம் தற்போது 600 முதல் 650 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்

அத்துடன் அவ்வாறு சின்ன வெங்காயத்தின் விலை அதிகரித்துள்ளதால், அதனை கொள்வனவு செய்யும் அளவுக்கு தம்மிடம் பணமில்லை எனவும் நுகர்வோர் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே சின்ன வெங்காயத்தின் மொத்த கொள்வனவு விலை அதிகரித்துள்ளதால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக சில்லறை வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் விலை அதிகரித்துள்ளதால், சின்ன வெங்காயத்தின் விற்பனையும் குறைந்துள்ளதாகவும் சில்லறை வர்த்தகர்கள்  கவலை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: