கடும் வறட்சி – 13 மாவட்டங்களில் ஒரு இலட்சத்து 71 யிரத்து 781 பேர் பாதிப்பு – அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவிப்பு!

Monday, August 14th, 2023

நாட்டில் நிலவும் கடும் வறட்சியுடனான காலநிலையால் 13 மாவட்டங்களில் 51ஆயிரத்து 641 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு இலட்சத்து 71ஆயிரத்து 781 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குறிப்பாக வடக்கு, கிழக்கு, சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலேயே அதிக பாதிப்புகள் பதிவாகியுள்ளன.

அத்துடன் வறட்சியால் அதிக பாதிப்புகளைச் சந்தித்துள்ள யாழ்ப்பாணத்தில் 21 ஆயிரத்து 999 குடும்பங்களைச் சேர்ந்த 70 ஆயிரத்து 238 பேர் குடிநீர் உள்ளிட்ட பல்வேறு அசௌ கரியங்களை எதிர்நோக் கியுள்ளனர் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதுகுறித்து அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் நேற்று (13) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது ,

இரத்தினபுரியில் 4ஆயிரத்து 39குடும்பங்களைச் சேர்ந்த 14ஆயிரத்து 116 பேரும் திருகோணமலையில் 02 ஆயிரத்து 320 குடும்பங்களைச் சேர்ந்த 07ஆயிரத்து 737 பேரும் மட்டக்களப்பில் 08ஆயிரத்து 892 குடும்பங்களைச் சேர்ந்த 29ஆயிரத்து 508 பேரும் அம்பாறையில் 07 ஆயிரத்து 739 குடும்பங்களைச் சேர்ந்த 25ஆயிரத்து 891 பேரும் புத்தளத்தில் 60 குடும்பங்களைச் சேர்ந்த 215 பேரும் குருணாகலில் 833 குடும்பங்களைச் சேர்ந்த 02ஆயிரத்து 575 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், யாழ்ப்பாணத்தில் 21ஆயிரத்து 999 குடும்பங்களைச் சேர்ந்த 70ஆயிரத்து 238 பேரும் மன்னாரில் 952 குடும்பங்களைச் சேர்ந்த 3ஆயிரத்து 244 பேரும் முல்லைத்தீவில் 167 குடும்பங்களைச் சேர்ந்த 563 பேரும் வவுனியாவில் 450 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்து 120 பேரும் பதுளையில் 329 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்து 324 பேரும் மொனராகலையில் 140 குடும்பங்களைச் சேர்ந்த 485 பேரும் ஹம்பாந்தோட்டையில் ஆயிரத்து 513 குடும்பங்களைச் சேர்ந்த 7ஆயிரத்து 512 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: