சின்ன வெங்காயச் செய்கையில் ஆர்வம் காட்டாத விவசாயிகள்!

Tuesday, November 28th, 2017

விதை வெங்காயத்தின் விலை அதிகரித்துள்ளமையால் சின்ன வெங்காயச் செய்கையில் ஈடுபடும் விவசாயிகள் குறித்த செய்கையில் ஆர்வம் காட்டவில்லை என தெரியவருகின்றது.

இதனால் சின்ன வெங்காயத்தின் விலை மேலும் அதிகரிப்பதுடன் பற்றாக்குறையும் ஏற்படும் என தெரிவிக்கப்படுகின்றது. தற்போது மாரி காலத்துக்கான வெங்காய செய்கைக்கு விவசாயிகள் தயாராகி வருகின்றனர். எனினும் விதை வெங்காயம் 50 கிலோ 20,000 ரூபாவாக விற்கப்படுகின்றது. இந் நிலையில் விதை வெங்காயத்தின் விலை அதிகமாக உள்ளமையால் வெங்காய செய்கையில் குறைவான விவசாயிகளே ஈடுபட்டுள்ளனர்.

இதனால் இனிவரும் மாதங்களில் யாழ்ப்பாணத்தில் சின்ன வெங்காயத்துக்குப் பற்றாக்குறையும் அதன் விலையும் அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

தற்போது திருநெல்வேலி, சுன்னாகம், மருதனார்மடம் போன்ற பிரதான சந்தைகளில் சின்ன வெங்காயம் ஒரு கிலோ 350 ரூபாவுக்கு அதிகமாக விற்பனை செய்யப்படுகின்றது.

இவ்வாறாக சின்ன வெங்காயத்தின் விலை மேலும் உயர்வடைந்தால் நுகர்வோர் பாதிக்கப்படுவார்கள் என்பது சுட்டிக்காட்டத்தக்கது

Related posts: