சின்னமடுவில் மரணித்த இரு சிறுமிகளுக்கும் ஈ.பி.டி.பியின் முக்கியஸ்தர்கள் இறுதி அஞ்சலி மரியாதை!

சின்னமடு பகுதியில் சிறிய நீர் நிலை ஒன்றில் வீழ்ந்து உயிரிழந்த இரண்டு சிறுமிகளுக்கும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முக்கியஸ்தர்கள் மலர்வளையம் சாத்தி இறுதி அஞ்சலி மரியாதை செலுத்தியுள்ளனர்.
ஊர்காவற்துறை நாரந்தனை தெற்கை வசிப்பிடமாக கொண்ட நிரஞ்சன் நிதுசா மற்றும் நிரஞ்சன் அனுஷ்கா ஆகிய சகோதரிகள் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் அகாலமரண மடைந்தனர்
இந்நிலையில் குறித்த சிறுமிகளின் இறுதி நிகழ்வுகள் இன்றையதினம் அவர்களது இல்லத்தில் நடைபெற்றது.
மரணித்த இரு சிறுமிகளின் இல்லத்திற்கு இன்றையதினம் செய்றிருந்த ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட நிர்வாக செயலாளர் சிவகுரு பாலகிருஸ்னன் உள்ளடங்கலான முக்கியஸ்தர்கள் சிறுமிகளின் பூதவுடல்களுக்கு மலர்வளையம் சாத்தி இறுதி அஞ்சலி மரியாதை செலுத்தியதுடன் சிறுமிகளின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கும் ஆறுதலையும் அனுதாபத்தையும் தெரிவித்திருந்தனர்.
முன்பதாக குறித்த இரு சிறுவர்களும் துவிச்சக்கர வண்டியில் கடைக்கு சென்றுள்ளனர். கடைக்கு சென்ற சிறுவர்களை காணவில்லை என தேடிய உறவினர்கள் வீதிக்கு அருகேயுள்ள சிறிய நீர் நிலையில் அவர்களது சடலங்கள் காணப்பட்டதை அவதானித்துள்ளனர்.
இருவரும் துவிச்சக்கர வண்டியுடன் தவறுதலாக நீர் நிலையில் விழுந்திருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
|
|