சிங்கள மகாவித்தியாலயத்தினை மீள இயக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் – வணபிதா டானியல் டிக்சன்!

Thursday, August 31st, 2017

யாழில் 512வது படைமுகாம் அமைந்துள்ள சிங்கள பாடசாலையினை மீள இயக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென சர்வமத குழுவின் செயலாளர் வணபிதா டானியல் டிக்சன் அஸ்கிரிய மகாநாயக்க தேரரிடம் வேண்டுகோளினை முன்வைத்துள்ளார்.

யாழிற்கு விஜயம் மேற்கொண்ட அஸ்கிரிய மகாநாயக்க தேரர் யாழ்.மாவட்ட செயலகத்தில் சர்வமத குழுவினரை சந்தித்து கலந்துரையாடினார். அந்த சந்திப்பின் போது, இந்துமத குருமார்கள், ஓய்வூதியம் மற்றும் இந்து குருமார் ஒன்றியத்திற்கான செயற்பாடுகள் முன்னெடுப்பதில் சிரமங்கள் காணப்படுகின்றதாகவும் தெரிவித்தனர்.

அதன்போது, பலாலி ஆசிரியர் கலாசாலை மற்றும் கோப்பாய் ஆசிரியர் கலாசாலை என்பவற்றினை சொந்த இடத்தில் இயக்குவதற்கு ஆவன செய்ய வேண்டுமென்று கேட்டுக்கொண்டதுடன், 512வது படைமுகாம் உள்ள சிங்கள மகாவித்தியாலயத்தினை மீள இயக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்றும் வலியுறுத்தினார்.
மும்மொழிகளையும் கற்பிக்க வேண்டிய கட்டாய நிலமை ஏற்பட்டுள்ளதுடன், சிங்கள மொழியினைக் கற்பிப்பதற்கும்; சிங்கள மகாவித்தியாலயத்தினை இயக்குவதன் மூலம் நல்லிணக்கத்தினை ஏற்படுத்துவதற்கும் சிறந்ததாக இருக்குமென்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
அதற்கு பதிலளித்த அஸ்கிரிய மகாநாயக்க தேரர் ஜனாதிபதியுடன் கலந்துரையாடி சிங்கள மகாவித்தியாலயத்தினை மீள இயக்குவதற்கான நடவடிக்கையினை மேற்கொள்ளவதாக உறுதியளித்துள்ளார்.

Related posts: