சாவகச்சேரி வெடி பொருட்களை கண்டுபிடித்த பொலிஸாருக்கு பதவி உயர்வு!

Thursday, March 31st, 2016

சாவகச்சேரி மறவன்புலொவில் வெடிபொருட்கள் மற்றும் தற்கொலை அங்கி ஆகியனவற்றை கண்டு பிடித்த பொலிஸாருக்கு பதவி உயர்வு வழங்கப்பட உள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

வெடிபொருட்களை கண்டுபிடித்து மீட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் பதவி உயர்வு வழங்கப்பட உள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் எஸ்.எம். விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இந்த சுற்றி வளைப்பிற்கு காரணமான பொலிஸ் கான்ஸ்டபிள் முதல் உயர் அதிகாரிகள் வரையில் அடையாளங்கண்டு பதவி உயர்வு வழங்கப்படும் எனவும் பொதுமக்களுடன் நெருக்கமாக இருந்தால் பொலிஸாருக்கு உளவுத் தகவல்கள் சுபலமாக கிடைக்கும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts: