சாவகச்சேரிப் பொலிசாரால் பிடிக்கப்பட்ட சட்டவிரோதமாக டிப்பர் வாகனத்தில் கடத்தப்பட்ட பாலை மரக் குற்றிகள்!
Monday, May 13th, 2024
அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக டிப்பர் வாகனத்தில் கடத்தப்பட்ட சுமார் முப்பது இலட்சம் ரூபாய் பெறுமதியான பாலை மரக் குற்றிகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை 4.30 மணியளவில் சாவகச்சேரிப் பொலிஸ் நிலையப் போக்குவரத்துப் பொலிஸ் உத்தியோகத்தர்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளது.
புத்தூர் வீதி ஊடாக மணலுக்குள் மறைத்துக் கடத்தப்பட்ட சுமார் 150 மரக்குற்றிகளே சாவகச்சேரிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கனகம்புளியடிச் சந்திப் பகுதியில் வைத்து பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
இதன்போது கடமையில் இருந்த பொலிஸாருக்கு மரக்கடத்தல்காரர்கள் ஒரு இலட்சம் ரூபாய் இலஞ்சம் வழங்கிய போதிலும் பொலிஸார் அதனை வாங்க மறுத்த நிலையில் கடத்தல்காரர்கள் டிப்பர் வாகனத்தையும் மரங்களையும் கைவிட்டு விட்டு தப்பித்துச் சென்றிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை சாவகச்சேரிப் பொலிஸார் முன்னெடுத்து வருவதுடன்-தப்பி ஓடிய சந்தேக நபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது
Related posts:
|
|
|


