சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதில் புதிய நடைமுறை!
Saturday, December 30th, 2017
2018 ஆம் ஆண்டு முதல் சாரதி அனுமதி பத்திரம் பெற்றுக் கொள்ளும் முறையில் மாற்றம் செய்யப்படவுள்ளது.
சாரதி அனுமதி பத்திரத்திற்கு விண்ணப்பிக்கும் நபர்கள் ஒருநாள் வேலைத்திட்டத்தில் கலந்து கொள்ளவதை கட்டாயமாக்க வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை தீர்மானித்துள்ளது. விபத்துக்கள் அதிகரித்துள்ளமையால் இந்த தீர்மானத்திற்கு வந்துள்ளதாக சபையின் தலைவர்சிசிர கோதாகொட தெரிவித்துள்ளார்.
இந்த வருடம் அதிகமான விபத்துக்களால் உயிரிழந்தவர்கள் பாதசாரிகள் என தெரியவந்துள்ளது. அவர்களுக்காக பல்வேறுவேலைத்திட்டங்களை ஏற்பாடு செய்ய உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் 2017ஆம் ஆண்டில் அதிகமான மரணங்கள் மோட்டார் சைக்கிள் விபத்துக்களாலும் இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1145ஆகும். கடந்த வருடங்களுடன் ஒப்பிடும் போது இது 22 வீத அதிகரிப்பாகும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
Related posts:
பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனம்; தொடர்பாடல் தகவல்களை வழங்கியவருக்கு இலஞ்சம் வழங்கியமை வெளியானது!
ஜனாதிபதியின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை: உயர்நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு!
சுயாதீன ஆணைக்குழு தொடர்பான புதிய அறிவிப்பு !
|
|
|


