சாரதி அனுமதிப்பத்திரம் தயாரித்தவர்கள் கைது!

Sunday, March 26th, 2017

போலி சாரதி அனுமதிப்பத்திரம் தயாரித்த மற்றும் அதற்கு உதவியவர்கள் என 07 சந்தேகநபர்களை பொலிசார் கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.!

பாணந்துறை மத்திய குற்றத் தடுப்பு பிரிவிற்கு கிடைத்த தகவலுக்கு அமைய, மருதானை மற்றும் வெல்லம்பிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் போலியான சாரதி அனுமதிப்பத்திரம் தயாரித்தமை மற்றும் அதற்கு உதவியமை தொடர்பிலேயே குறித்த சந்தேகநபர்களை கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்ட குறித்த 07 சந்தேகநபர்களும், 43, 50, 58, 37, 38, 36 ஆகிய வயது கொண்டவர்கள் என்பதோடு, குறித்த நபர்கள், மட்டக்குளிய, நாராஹேன்பிட்ட, மல்வானை, பாணந்துறை, கிருலப்பனை ஆகிய பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

பாணந்துறை வலானை, மத்திய குற்றத் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்ட குறித்த சந்தேகநபர்கள், மீரிஹானை மற்றும் வெல்லம்பிட்டிய பொலிஸ் பிரிவில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட குறித்த நபர்களிடமிருந்து

  1. போலியாக தயாரிக்கப்பட்ட 06 சாரதி அனுமதிப்பத்திரம்
  2. அச்சிட தயார் நிலையில் வைக்கப்பட்ட போலி அனுமதிப்பத்திரம்
  3. கணனி
  4. லெமினெட்டிங் இயந்திரம்
  5. ஸ்கேனிங் இயந்திரம்
  6. பிரின்டர் பொருட்களையும் பொலிசார் மீட்டுள்ளனர்.

Related posts:

புதிய கல்வியாண்டின் கல்வி நடவடிக்கைகளுக்காக அனைத்து பாடசாலைகளும் நாளையதினம் மீண்டும் ஆரம்பம் – கல்வ...
யாழ் போதனா மருத்துவ கழிவு தொடர்பில் அச்சமடையதேவையில்லை - பணிப்பாளர் த,சத்தியமூர்த்தி தெரிவிப்பு!
பொருளாதாரதத்தை மறுசீரமைக்க சட்டமூலம் - 3 வருடங்களில் இளைஞருக்கான சிறந்த நாடு கட்டியெழுப்பப்படும் - ஜ...