சாதாரண தரம் தோற்றியோர் உயர்தரத்தில் கல்வி கற்கலாம் – கல்வி அமைச்சு அறிவித்துள்ளது!

Thursday, May 10th, 2018

இந்தமுறை சாதாரணதரப் பரீட்சை எழுதிய மாணவர்கள் அனைவரும் உயர்தரம் கற்க முடியும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. 2017 ஆம் ஆண்டு பரீட்சை எழுதி முடிவுகள் கிடைத்த மாணவர்கள் அனைவரும் உயர்தரம் கல்வி கற்க முடியும். உயர்தரம் மட்டுமல்லாது பல்கலைக்கழகம் சென்று பட்டம் பெறமுடியும்.

2 வருடங்கள் கொண்ட உயர்தரக் கல்வியில் 6 தவணைகள் தொடர்ந்து கல்வி கற்க வேண்டும். தற்போது உயர்தரத்தில் காணப்படுகின்ற கலை, வர்த்தகம், கணிதம், விஞ்ஞானம் மற்றும் 2 தொழில்நுட்பப் பிரிவுகள் என 6 பாடத்திட்டங்கள் காணப்படுகின்றன. இதற்கு மேலதிகமாக தொழில் கல்வி என்ற பிரிவு 7 ஆவது பிரிவாக அறிமுகப்படுத்தப்படுகிறது. இந்தப் பிரிவு இந்த முறை பரீட்சை எழுதிய 2018ஃ2020 ஆம் மாணவருக்கே அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இதன்போது மொழிப்பாடங்கள், தொழில் வழிகாட்டல், உளவியல், தொடர்பாடல் தொழில்நுட்பம் போன்றன கட்டாயமாக கற்றல் வேண்டும். இவற்றில் தெரிவு கிடையாது. இப்பாடங்கள் முதலாம் வருட ஆரம்பத்தில் கற்கவேண்டும்.

மேலும் தொடர்பாடல் தொழில்நுட்பம், பொறியியல், மின்னியல், பிளம்பிங், விடுதி முகாமைத்துவம், பெண் அலங்காரம் போன்ற பாடங்களில் 3 பாடங்கள் தெரிவுசெய்து முதலாம் வருட இறுதியில் கற்கவேண்டும். இரண்டாம் வருடம் முதல் வருட இறுதியில் கற்ற பாடத்தில் இருந்து ஒரு பாடத்தைத் தெரிவுசெய்து அதனையே இரண்டாம் வருடம் முழுவதும் கற்று அந்தப் பாடத்தையே உயர்தரப் பரீட்சையில் சித்தி பெற்று பல்கலைக்கழகம் செல்ல வேண்டும்.

இதற்கு சிறப்பாக இரத்மலானையில் தொழில் பிரிவுக்கு தனித்துவமான பல்கலைக்கழகம் மானியங்கள் ஆணைக்குழுவால் பரிந்துரைக்கப்பட்டு செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts: