சாதாரண தரம் கூட சித்தியடையாதொருக்கு விளையாட்டு ஆலோசகர் பதவி ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு!
Wednesday, December 28th, 2016
ஜி.சீ.ஈ சாதாரணதரப் பரீட்சையில் சித்தி பெறாதவர்களும் அரச பாசாலைகளில் விளையாட்டு ஆலோசகர்களாக நியமனம் செய்யப்பட்டிருப்பதாக இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.
அரச பாடசாலைகளில் எந்தவொரு தொழிலிலும் நியமிக்கப்பட வேண்டியவர்கள் குறைந்தது ஜி.சீ.ஈ சாதாரணதரப் பரீட்சையில் சித்தி பெற்றிருக்க வேண்டும் என்பது கல்வியமைச்சின் அடிப்படைக் கொள்கையாக இருந்தபோதிலும் அண்மையில் நடந்த விளையாட்டு ஆலோசகர் நியமனங்களில் இந்தக்கொள்கை முற்றாக மீறப்பட்டிருந்ததாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதம செயலாளர் ஜோசப் ஸ்ராலின் தெரிவித்துள்ளார். நாடு முழுவதிலும் உள்ள அரச பாடசாலைகளுக்கு 3ஆயிரம் விளையாட்டு ஆலோசகர்களை நியமிக்க கல்வியமைச்சு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts:
எனது கதிரையை வழங்குவதற்கு தயாராக உள்ளேன் - சபாநாயகர்!
நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் காலம் நீடிப்பு!
வீதி விபத்துக்களை மட்டுப்படுத்துவதற்கு விசேட வேலைத்திட்டம் - அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவிப்ப...
|
|
|


