சாதாரணதர பாட விதானத்திலிருந்து சமயம், வரலாறு நீக்கப்பட மாட்டாது – கல்வி அமைச்சர்!

Tuesday, June 26th, 2018

க.பொ.த சாதாரணதர பாட விதானத்தில் அடிப்படையான எட்டுப் பாடங்களை ஆறாகக் குறைப்பதற்கு கல்வியமைச்சு நடவடிக்கை மேற்கொள்ளவுள்ள நிலையில் அவ்வாறு வரலாறு மற்றும் சமயம் ஆகிய பாடங்கள் பாடவிதானத்தில் இருந்து நீக்கப்படமாட்டாதென கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

க.பொ.த சாதாரணதரம் பாட விதானத்தில் அடிப்படையான 8 பாடங்களிலிருந்து சமயம் மற்றும் வரலாறு ஆகிய பாடங்களை கல்வியமைச்சு நீக்கப் போவதாக குற்றம்சாட்டி பல முறைப்பாடுகள் அமைச்சுக்குக் கிடைத்துள்ளன.

ஆயினும் அவ்வாறு வரலாறு, சமயம் ஆகிய பாடங்களை நீக்குவதற்கு தீர்மானம் எதனையும் கல்வி அமைச்சு மேற்கொள்ளவில்லை. எந்தவொரு சந்தர்ப்பத்திலும் வரலாறு, மொழி, சமயம் ஆகிய பாடங்கள் பாடவிதானத்தில் அடிப்படையான பாடங்களிலிருந்து நீக்கப்படமாட்டாது.

மாணவர்களின் கல்விச் சுமையைக் குறைக்க வேண்டுமென்றே ஆலோசனைப் பேராசிரியர்கள் மற்றும் உயர் கல்வியாளர்கள் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வியில் மிகவும் முன்னேறிய பல்வேறு நாடுகளிலும் கல்வித் திட்டங்களில் பாடங்களின் எண்ணிக்கை மட்டுப்படுத்தப்பட்டவையாகவே உள்ளது. இதற்கேற்ப க.பொ.த சாதாரண தரத்திற்கான அடிப்படைப் பாடங்களின் எண்ணிக்கையை ஆறாகக் குறைப்பதற்கு ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts: