சாதாரணதர பரீட்சை முடிந்தவுடன் உயர்தர வகுப்புகள் ஆரம்பிக்கப்பட வேண்டும் – கல்வி அமைச்சர் அறிவுறுத்து!
Tuesday, April 30th, 2024
இம்முறை கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு தேர்வு முடிந்த உடனேயே கல்விப் பொதுத் தராதர உயர்தர வகுப்புகள் ஆரம்பிக்கப்பட வேண்டுமென கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
கடந்த கொவிட் அனர்த்தத்தின் போது பாடசாலைகள் மூடப்பட்டமையினால் விடுபட்ட கல்வி மற்றும் பாடசாலை பரீட்சை அட்டவணையை மீட்டெடுப்பதற்கான திட்டத்தின் படி இவ்வருடம் குறித்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மஹரகம தேசிய கல்வி நிறுவகத்தில் தேசிய கல்வி நிறுவகத்தின் உத்தியோகபூர்வ இணைய வானொலியை (NIE Visual Radio) ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
அத்தியாவசிய மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு - அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் குற்றச்சாட்டு!
12,000 மெற்றிக் தொன் எரிவாயுவை இறக்குமதி செய்ய நடவடிக்கை - நிதி அமைச்சு!
யாழ் மாவட்டத்திற்கு வழங்கப்பட்ட முதலாம் கட்ட தடுப்பூசிகள் இன்றுடன் நிறைவு - மக்கள் குழப்பமடைய தேவைய...
|
|
|


