சாக்கடல் உருவாகும் ஆபத்து – இலங்கையை எச்சரிக்கும் கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணையம்!

Friday, January 24th, 2020

ஒழுங்கற்ற மீன்பிடி நடவடிக்கை மற்றும் சுற்றுச்சூழல் மாசுபாடு என்பவற்றால் சாக்கடல் மண்டலங்கள் ஏற்படும் ஆபத்துக்கள் இலங்கையில் உள்ளதாக கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணைய அதிகாரி பிரதிப் குமார தெரிவித்துள்ளார்.

மேலும் சாக்கடல் மண்டலம் குறைந்த ஒக்ஸிஜன், நச்சு வாயுக்கள் மற்றும் காற்றில்லா நீர் கொண்ட கடலாகும்.

நாட்டின் கரையோரப் பகுதியுடன் இந்த மண்டலங்கள் உருவாக்கப்பட்டால் கடல் சுற்றுச்சூழல் அமைப்பு கடுமையாக பாதிக்கப்படக்கூடும் என கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.

சாக்கடல் அல்லது இறந்த கடலில் உயிரினங்கள் வாழ முடியாமையினாலேயே இது சாக்கடல் அல்லது இறந்தகடல் என அழைக்கப்படுகிறது.

சாக்கடல், பொதுவான கடல்நீரிலுள்ள உப்புத்தன்மையை விட 8.6 மடங்கு அதிகளவு உவர்ப்புடைய நீரைக் கொண்டது. கடல் மட்டத்திலிருந்து தற்போது 423 மீட்டர் கீழே அமைந்திருக்கிற சாக்கடல் தொடர்ந்தும் கீழிறங்குகிறது. இவ்விறக்கம் பூமியின் மேல் ஓடுகளின் விரிசலினால் ஏற்படுகிறது.

சாக்கடலுக்கு அடியிலும் அதைச் சுற்றியும் உள்ள நீரூற்றுகளிலிருந்தும் நீர் கிடைக்கிறது. இதனால் இந்த ஏரியைச் சுற்றி சிறிய நீர்த்தேக்கங்களும் புதைமணல் பகுதிகளும் உருவாகியுள்ளன.

Related posts: