சவுதியின் முன்னணி ஆடை நிறுவனப் பிரதிநிதிகள் – வெளிவிவகார அமைச்சர் அல் சப்ரி சந்திப்பு – இலங்கையில் முதலீடு செய்வது தொடர்பில் ஆரராய்வு!

சவுதியின் முன்னணி ஆடை நிறுவனமான Ajlan & Bros Group இன் பிரதிநிதிகள் குழுவொன்று இலங்கை வந்துள்ளது.
அஜ்லான் & பிரதர்ஸ் குழுமத்தின் தலைவர் ஷேக் மொஹமட் அல்-அஜ்லான் உள்ளிட்ட குழுவினரை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி வரவேற்றார்.
“இலங்கையில் முதலீடு செய்வதற்கான குழுவின் திட்டங்கள் ஊக்கமளிக்கின்றன” என்று அமைச்சர் அலி சப்ரி டுவிட்டர் செய்தியில் தெரிவித்தார்.
Ajlan & Bros Group, சவுதி அரேபியா மற்றும் வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் (GCC) பிராந்தியத்தில் பாரம்பரிய மற்றும் ஓஃப்-தி-ஷெல்ஃப் ஆடை தயாரிப்புகளில் நிபுணத்துவம் பெற்ற முன்னணி நிறுவனங்களில் ஒன்றாகும்.
1979 இல் நிறுவப்பட்டதும் ரியாத்தை தளமாகக் கொண்டதுமான அஜ்லான் & பிரதர்ஸ் 10 க்கும் மேற்பட்ட வெவ்வேறு நாடுகளில் 12,000 பணியாளர்களைக் கொண்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
இனப்படுகொலை தொடர்பில் கனேடிய நாடாளுமன்றத்தின் தீர்மானம் – வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் கடும் எதிர்ப்பு...
சிலாபம், தொடுவாவ மேற்கு கடற்பரப்பில் கடலோர காவல்படையினர் 2,467 கிலோ பீடி இலைகளை கைப்பற்றியுள்ளனர்!
இலங்கைக்கான கடன் நிவாரணத் திட்டத்தில் இணைந்து கொள்ளும் முக்கிய நாடுகள் - இந்திய நிதி அமைச்சர் நிர்மல...
|
|