சவால்களை முறியடிக்கும் அரசாங்கத்தின் அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கு அதிகாரிகளது அனைவரினதும் ஆதரவு அவசியம் – உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த தெரிவிப்பு!

Saturday, March 16th, 2024

கடந்த காலங்களில் நாடு பல்வேறு சவால்களை எதிர்கொண்டது. அந்தச் சவால்களை முறியடிக்கும் வகையில் அரசாங்கத்தின் அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கு அதிகாரிகளது அனைவரினதும் ஆதரவை எதிர்பார்க்கிறோம் என உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த தெரிவித்துள்ளார்.

மாவட்ட செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர்களுடன் இடம்பெற்ற சந்திப்பின்போதே இராஜாங்க அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில்

அன்று நாம் இருந்த நிலையை மறந்துவிடக் கூடாது. கடந்த நெருக்கடியான காலத்தில், நாட்டு மக்களின் அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வேலைத்திட்டத்தில் அதிகாரிகள் இரவும் பகலும் சிறந்த சேவையைச் செய்தார்கள்

 மேலும் அஸ்வெசும நலன்புரித் திட்டத்தை வெற்றிகரமாக முடிக்க அதிகாரிகள் அனைவரின் ஆதரவும் எங்களுக்குத் தேவை. கடந்த வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களின் சம்பளத்தை ஜனாதிபதி அதிகரித்தார். உருமய வேலைத்திட்டம் மக்களுக்கு காணி உரிமையை வழங்குவதற்காக ஆரம்பிக்கப்பட்டது.

நாட்டு மக்கள் அனைவருக்கும் சலுகைகள் சமமாக பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். விருதுகள், கௌரவங்கள் பெற வேண்டுமானால் நேர்மையாக மக்கள் சேவை செய்ய வேண்டும்.

கடந்த அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்தின்போது ஜனாதிபதி மாத்திரமன்றி அமைச்சர்களின் வீடுகளும் தீக்கிரையாக்கப்பட்டன. நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கொல்லப்பட்டார்.

இவ்வாறான நிலையில் ஜனாதிபதி இந்த நாட்டைப் பொறுப்பேற்று நாடாளுமன்றத்தை போராட்டக்காரர்களிடமிருந்து காப்பாற்றாவிட்டால் அரச அதிகாரிகளின் வீடுகளும் தீக்கிரையாக்கப்பட்டிருக்கும் என்பதைக் கூற வேண்டும்.” என்று தெரிவித்திருந்த அமைச்சர் ”நாட்டின் அனைத்து அரச அதிகாரிகளையும் சந்தித்துக் கலந்துரையாடுவதற்கான சந்தர்ப்பத்தை வழங்கிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாகவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

000

.

Related posts:

உயர்தரப் பரீட்சைத் தகைமையுடன் பரீட்சைக்குத் தோற்றுவோரின் சந்தர்ப்பங்கள் பட்டதாரிகளால் இல்லாமற் செய்ய...
வடக்கு கடலில் பேருந்துகளை இறக்கும் நடவடிக்கையை தொடர்ந்து முன்னெடுங்கள் – அரசாங்கத்திடம் யாழ் மாவட்ட ...
எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜப்பான் விஜயம் – அந்நாட்டின் முக்கிய தலைவர்க...