சர்வதேச ரீதியில் எதிர்நோக்கும் சில பிரச்சினைகளை தீர்க்க ஜப்பானின் உதவியை நாடுகிறது இலங்கை – பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவிப்பு!

இலங்கை சர்வதேச ரீதியில் எதிர்நோக்கும் சில பிரச்சினைகளை தீர்க்க ஜப்பானின் உதவியை நாடவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இரண்டு நாடுகளுக்குமிடையிலான இராஜதந்திர உறவுகளின் 70 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஜப்பானிய தூதரகத்துடன் கூட்டாக நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்..
இலங்கையின் பார்வையை மற்ற நாடுகளுக்கு முன்வைப்பதிலும் விளக்கமளிப்பதிலும் ஜப்பான் ஏற்கனவே அதன் பங்கை ஆற்றியுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும், ஜப்பானிய கலாசாரம் காட்டும் பச்சாதாபம், இரக்கம், மென்மை மற்றும் ஒருமித்த கருத்து ஆகியவற்றின் காரணமாக ஜப்பான் அதைச் செய்யத் தகுதி பெற்றுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
தேர்தல் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண மாவட்ட அலுவலகத்திற்காக புதிய கட்டடம்!
இலங்கையில் காலநிலை தொடர்பான ஆய்வு நிலையமொன்றை அமைக்க ஜேர்மன் நடவடுக்கை!
"தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இருக்கும் வரை தமிழர்களுக்கு விமோசனம் கிடையாது –பிரபாகரனே நூற்றுக்க...
|
|