சர்வதேச பெண்கள் மகாநாடு யாழ்ப்பாணத்தில் ஆரம்பம்!

Saturday, July 21st, 2018

யுத்தத்தின் பின்னரான சூழலில் பெண்களின் தலைமைத்துவம் மற்றும் வலுவூட்டல் என்ற தலைப்பிலான சர்வதேச பெண்கள் மகாநாடு இன்று (21) ஆரம்பமாகி இரண்டு நாட்கள் நடைபெறுகின்றன.

யாழ்ப்பாண பொது நூலக கேட்போர் கூடத்தில் நேற்றுக் காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகிய இந்த மாநாடு நாளை 22 ஆம் திகதியும் நடைபெறவுள்ளது.

மாணவிகளின் நடன நிகழ்வுடன் ஆரம்பமான இந்த மாநாட்டில், பிரதம விருந்தினராக யாழ்.பல்கலைக்கழகத்தின் பதில் துணைவேந்தர் சுதாகரன் கலந்துகொண்டிருந்தார். சிறப்பு விருந்தினராக யாழ்மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் மற்றும் மேலதிக அரசாங்க அதிபர் சுகுணரதி தெய்வேந்திரம் உட்பட துறை சார்ந்த பெண்கள் பலர்கலந்துகொண்டிருந்தனர்.

இந்த நிகழ்வின் பெண்கள் தொடர்பான ஆய்வுகள் சமர்ப்பிக்கப்பட்டு விவாதிக்கப்படுவதோடு எதிர்காலத்தில் பெண்கள் தொடர்பான அபிவிருத்தித்திட்டங்கள் மற்றும் கொள்கைவகுப்பிற்கான முன்மொழிவுகளும் முன்வைக்கப்படவுள்ளன.

முப்பதிற்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் பல்வேறு நாடுகளிலுமிருந்து வருகைதந்து தமது ஆய்வுக்ட்டுரைகளைச் சமர்ப்பித்துள்ளனர்.ஆய்வு மகாநாட்டின் ஆய்வுத் தொடக்கவுரை பிரதமமந்திரியின் பாரியார் பேரிசிரியர் மைத்திரி விக்கிரமசிங்க நிகழ்த்தவுள்ளார்.

ஆய்வு மகாநாட்டில் எட்டுத் தலைப்புக்களில் அறுபது ஆய்வுகள் சமர்ப்பிக்கப்படுகின்றன. உள்நாட்டிலும்; வெளிநாடுகளையும் சேர்ந்த 83 ஆய்வாளர்கள் இதில் பங்குபற்றி தமது ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்புரைகளை வழங்கினாலீர்கள்.

மேலும் இன்றைய நிகழ்வில், பால்நிலை சமத்துவம் பெண்களின் பொருளாதாரம் மற்றும் வலுவூட்டல் பெண்களின் உளசமூக மேம்பாடு சமூக்கட்டமைப்பு மற்றும் பாதுகாப்பு பெண்களும் ஊடகமும் கட்டிளமைப்பருவத்தினரும் மாறிவரும் சூழலும் என்ற தலைப்புக்களில் ஆய்வுகள் சமர்ப்பிக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்வில், கலந்துகொணண்டு, நடனமாடிய பாடசாலை மாணவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன், மாநாட்டில் கலந்துகெர்ணட பிரதம அதிதிகள் மற்றும் சிறப்பு அதிதிகளுக்கான மாநட்டினை நினைவுகூறும் நினைவுச் சின்னங்களும் வழங்கி கௌரவிக்கப்டிருந்தனர்.
இந்த மாநாட்டில, பெண்களை பிரதிநதித்துவப்படுத்தி பணியாற்றும் பல மகளீர் அமைப்புக்களைச் சேர்ந்த பெண்கள், சர்வதேசத்திலிருந்தும், உள்நாட்டில் இருந்தும் பங்குபற்றியமை குறிப்பிடத்தக்து.

Related posts:


கடந்த முப்பது வருட கால யுத்தத்தில் எந்தவொரு தலைவர்களும் வெற்றி பெறவில்லை - வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட்...
எதிர்காலச் சவால்களை நம்பிக்கையுடன் எதிர்கொள்ளத் தேவையான திறன்களை இளைஞர்களுக்கு சாரணர் உலகம் அளிக்க வ...
பொருளாதார நெருக்கடி - மீள்வதற்காக இலங்கை முன்னெடுத்து வரும் மறுசீரமைப்பு வேலைத்திட்டங்களுக்கு சர்வத...