சர்வதேச பயங்கரவாதத்தை கட்டுப்படுத்த இலங்கை பூரண ஒத்துழைப்பு!

Tuesday, October 18th, 2016

சர்வதேச பயங்கரவாத நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்கு இலங்கை பூரண ஒத்துழைப்பு வழங்குமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாபிரிக்க நாடுகளின் தலைமைத்துவம் என்று அழைக்கப்டும் பிறிக்ஸ் மாநாட்டை முன்னிட்டு பிறிம்ஸ்டெக் எனப்படும் வங்காள விரிகுடாவை அண்மித்த வலைய நாடுகளின் தலைவர்களது மாநாடு நேற்றுமுன்தினம் கோவா நகரில் நடைபெற்றது.

இலங்கை, தாய்லாந்து, பூட்டான், இந்தியா, மியன்மார், நேபாளம், பங்களாதேஷ் ஆகிய நாடுகளின் அரச தலைவர்கள் இந்த மாநாட்டில் கலந்துகொண்டதுடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இங்கு விசேட உரைநிகழ்த்தினார்.

வலைய நாடுகளின் அபிவிருத்திக்கு பிறிம்ஸ்டெக் மாநாடு முக்கியத்துவம் பெறுவதாக ஜனாதிபதி இங்கு குறிப்பிட்டுள்ளார். இதேவேளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சின ஜனாதிபதி ஷி பிங் ஜிங்கை நேற்று சந்தித்துள்ளார்.

இலங்கை்கும் சீனாவிற்குமான உறவுகள் வலுப்பெற்றுள்ளதாகவும் இதனூடாக இரு நாடுகளுக்குமிடையிலான நீண்டகால உறவுகளை முன்னோக்கி கொண்டுசெல்வதற்கு தாம் தயாராக இருப்பதாகவும் சீன ஜனாதிபதி தெரிவித்துள்ளார்..

வர்த்தகம், துறைமுக மேற்பார்வை மற்றும் இலங்கையின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல் போன்ற விடயங்களில் நெருங்கி செயற்படவுள்ளதாகவும் சீன ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையிலான உறவுகள் கடந்த காலங்களை விட தற்போது உறுதியாக காணப்படுவதாகவும் ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன இதன்போது தெரிவித்துள்ளார்.

இதேவேளை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை சந்தித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இருதரப்பு உறவுகள் தொடர்பில் கலந்துரையாடியதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அடுத்த வருடம் ரஷ்யாவிற்கான விஜயத்தில் ஈடுபடுவார் என எதிர்பார்த்துள்ளதாக ரஷ்ய ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

maithry2

Related posts:

இந்தியா மற்றும் மாலைதீவுகளுடன் கடல்சார் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மட்ட முத்தரப்பு செயலகம் கொழும்பில் ...
ஆயிரம் தேசிய பாடசாலைகள் வேலைத்திட்டம் இலவசக் கல்வி வரலாற்றின் மைல்கல் - கல்வி அமைச்சர் தினேஷ் குணவர...
சிவில் யுத்தத்தை வெற்றிக்கொண்டதை போன்று ஜனாதிபதி பொருளாதார யுத்தத்தையும் ராஜபக்சவினர் வெற்றிக்கொள்வர...