நெவில் பெர்ணான்டோ வைத்தியசாலை விவகாரம் – கணக்காய்வாளர் திணைக்களத்திடம் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கோரிக்கை!

Monday, June 10th, 2019

நெவில் பெர்ணான்டோ தனியார் வைத்தியசாலையை பராமரிப்பதற்காக, சுகாதார அமைச்சு ஊடாக அரசாங்கம் நிதி வழங்கியமை தொடர்பில், முழுமையான கணக்காய்வை முன்னெடுத்து, தகுந்த சிபாரிசை முன் வைக்குமாறு, கணக்காய்வாளர் திணைக்களத்திடம் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) கோரிக்கை விடுத்துள்ளது.

அரசாங்கம் பொறுப்பேற்காத குறித்த இந்த வைத்தியசாலையின் பராமரிப்புக்காக, அமைச்சரவைப் பத்திரம் ஊடாக மாதாந்தம் 250 மில்லியன் ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாகவும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அளுத்கே தெரிவித்துள்ளார்.

2017ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடக்கம் இன்று வரை 5 பில்லியனுக்கு அதிகமான நிதி குறித்த வைத்தியசாலைக்கு வழங்கப்பட்டுள்ளதாக, ஜனாதிபதி விசேட ஆணைக்குழுவின் முன்னிலையில், சுகாதார அமைச்சின் செயலாளர் சாட்சி வழங்கியுள்ளதாகவும் அவர் மேலும் ​சுட்டிக்காட்டியிருந்தார்.

Related posts: