தேர்தலை நடத்துவதற்கு எதிரான அடிப்படை உரிமைமீறல் மனுவின் விசாரணை நாளைவரை ஒத்திவைப்பு!

Thursday, May 28th, 2020

ஜூன் 20ஆம் திகதி தேர்தலை நடத்துவதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைமீறல் மனுவின் விசாரணை மீண்டும் நாளை முற்பகல் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இன்று மனுக்கள் பிரதம நீதியரசர் ஜயந்த ஜெயசூரிய, நீதியரசர்கள்- புவனக்க அலுவிஹார, சிசிர டி ஆப்ரூ, பிரியந்த ஜெயவர்த்தன மற்றும் விஜித மலல்கொட ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு எடுக்கப்பட்டன.

ஏப்ரல் 25ஆம் திகதி பொதுத்தேர்தல் நடத்தப்படும் என்ற வகையில் ஜனாதிபதியினால் மார்ச் 2ஆம் திகதி வர்த்தமானி ஒன்று வெளியிடப்பட்டது.

எனினும் தேர்தலை உரிய திகதியில் நடத்தமுடியவில்லை. அத்துடன் ஜூன் 2ஆம் திகதியன்று புதிய நாடாளுமன்றத்தையும் கூட்டமுடியவில்லை.

எனவே மூன்று மாத காலத்தில் எவ்வித நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படாமை காரணமாக மார்ச் 2ஆம் திகதி வர்த்தமானியை ஜனாதிபதி மீளப்பெற வேண்டும் என்று மனுக்களில் கோரப்பட்டிருந்தது.

எனினும் கடந்த இந்த வர்த்தமானியை மீளப்பெறுவதற்கு ஜனாதிபதிக்கு அதிகாரம் இல்லை என்று அவரின் சார்பில் முன்னிலையான சட்டமா அதிபர் மன்றில் வாதிட்டார். இந்தநிலையிலேயே இன்றும் வாதப்பிரதிவாதிகள் இடம்பெற்றன. இதன்படி இந்த மனுக்களின் விசாரணை நாளை 9 ஆவது நாளாகவும் உயர் நீதிமன்றத்தில்  நாளையதினம் விசாரணைக்கு வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: