சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகளை இலங்கை விஜயம் செய்யுமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க அழைப்பு!
Wednesday, June 8th, 2022
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளை இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டாலினா ஜோர்ஜிவாவுடன் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்றையதினம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
நாணய நிதியத்தின் உயர்மட்ட குழுவொன்றை முடிந்தளவு சீக்கிரம் இலங்கைக்கு அனுப்பி வைக்குமாறும் இதன்போது அவர் கோரியுள்ளார்.
மேலும் சர்வதேச நாணய நிதியத்துடன், துரித கதியில் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொள்ள விரும்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இந்த நெருக்கடியான தருணத்தில் இலங்கைக்கு உதவிகளை வழங்க விரும்புவதாக முகாமைத்துவ பணிப்பாளர் ஜோர்ஜிவா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
யாழ் போதனா வைத்தியசாலைக்கு ஒரு பில்லியன் ரூபா ஒதுக்கீடு!
யாழ்.போதனா வைத்தியசாலைக்குள் பிளாஸ்ரிக், பொலித்தீன் கொண்டு செல்லத் தடை அடுத்த வாரம் முதல் நடைமுறைக்...
இலங்கை மற்றும் சீனாவுக்கு இடையே இரு தரப்பு உறவுகள்!
|
|
|


