யாழ்.போதனா வைத்தியசாலைக்குள் பிளாஸ்ரிக், பொலித்தீன் கொண்டு  செல்லத் தடை அடுத்த வாரம் முதல் நடைமுறைக்கு!

Wednesday, January 11th, 2017

யாழ்.போதனா வைத்தியசாலை வளாகத்துக்குள் பிளாஸ்ரிக், பொலித்தீன் பைகள் மற்றும்  உணவுத் பொதியிடப் பய்படும் பொலீத்தின் வகை என்பன எதிர்வரும் 16ஆம் திகதியில் இருந்து கொணடு வரப்படுவது முற்றாகத் தடை செய்ப்பட்டுள்ளது என யாழ். போதனா வைத்தியாலைப் பணிப்பாளர் ரி.சத்யமூர்த்தி அறிவித்துள்ளார்.

இது தொடர்பில் அனுப்பி வைத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கபட்டிருப்பதாவது,

நோயாளர்களைப் பார்வையிட வரும் பொதுமக்கள் மற்றும் உழியர்கள் அனைவரும் வைத்தியசாலை வளாகத்துக்குள் பிளாஸ்ரிக், பொலித்தீன். பைகள் மற்றும் உணவுத் பொதியிடப் பய்படும் பொலீத்தின் வகை கொண்டு வருவது தடைசெய்யப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படுத்தாத பைகளை பாவிக்கு மாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். உணவு கொடு வருவதற்கு உணவு பொதியிடப் பயன்படும் பொலித்தீன் வகை தாள்களுக்கு மாற்றீடாக சாப்பாட்டு பெட்டிகள், வாழை இலை, மடல் போன்ற இயற்கையைன சுற்றாடலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத பொருட்களைப் பயன்படுத்த வேண்டும். மேலே குறிப்பிட்ட விடயங்கள் அடுத்த மாத ஆரம்பத்திலிருந்து முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும்  பொதுமக்களது பொதிகள் யாவும் சோதனைக்கு உட்படுத்தப்பட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Jaffna-Hospital-strike-newsfirst-626x3801

Related posts: