வீதி ஒழுக்கு விதிமுறைகளை மதித்து செயற்பட்ட சாரதிகள் கௌரவிப்பு!

Wednesday, November 1st, 2017

தவறு விளைவிக்கும் சாரதிகளுக்கு தண்டப்பண பற்றுச்சீட்டு வழங்கும் போக்குவரத்து தொழிற்பிரிவினால் வீதி ஒழுங்குகளை முறையாக கடைப்பிடித்து வாகனங்களை செலுத்தும் சாரதிகளை கண்டறிந்து பெறுமதிமிக்க பரிசுகளை வழங்கும் வேலைத்திட்டம் பொலிஸ்மா அதிபரினால் அறிமுகப்படுத்தப்பட்டது.

இதன்படி வீதி ஒழுங்குகளை முறையாக கடைப்பிடித்து வாகனங்களை செலுத்திய சாரதிகள் கௌரவிக்கப்பட்டுள்ளனர்.

ஒரு மாத குறுகிய காலப்பகுதியில் இந்த வேலைத்திட்டத்தின் கீழ் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சாரதிகள் கண்டறியப்பட்டிருப்பதாக பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்தார்.

பொலிஸ் மா அதிபர் மற்றும் இத்தெரிவுக்கான நிகழ்ச்சி நிரலுக்கு பங்களிப்பு வழங்கிய ஆசிரி மருத்துவமனையின் பணிப்பாளர் சபை டிஐ பாதணி தாயாரிப்பு நிறுவனத்தின் பணிப்பாளர் சபையில் இப் பாராட்டு நிகழ்வு இடம் பெற்றது.

பொலிஸ் மா அதிபரின் ஆலோசனைக்கமைவாக நடைமுறைப்படுத்தப்படும் அனைத்து வீதி ஒழுங்கு விதிகளையும் கடைப்பிடித்து வாகன சாரதிகளை கண்டறியும் பணியில் ஈடுப்பட்டுள்ள வாகன பொலிஸ் அதிகாரிகளுக்கும் , இந்த நடவடிக்கை தொடர்பாக ஊடகம் மூலம் தெளிவுபடுத்திய பொலிஸ் தலைமையக பொலிஸ் ஊடகப்பிரிவின் சேவையை கௌரவிக்கும் நிகழ்வொன்று நடைபெற்றது.

வீதி ஒழுங்கு விதி முறைகளை மதித்து செயற்படும் சாரதிகளை கண்டறிவதற்கான வேலைத்திட்டம் கொழும்பு கண்டி குருநாகல் போன்ற நகரங்களில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பு நகரில் மாத்திரமே தற்போது வீதி ஒழுங்கு விதிமுறைகளை மதித்து செயற்படும் சாரதிகள் கண்டறிப்பட்டிருப்பதாக பொலிஸ் மா அதிபர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த சாரதிகளுக்கு ஒழுக்க விதிமுறைகளை மதிக்கும் சான்றிதழ்களும் பரிசுகளும் இதன்போது வழங்கப்பட்டுள்ளன.

Related posts:

வறிய மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை மேம்படுத்த நாம் தயாராகவே இருக்கின்றோம் – ஈ.பி.டி.பியின் நல்லூர் ...
இலங்கை விமானப்படையின் 70வது ஆண்டு நிறைவு விழா ஆரம்பம் – இந்தியாவின் 23 வான்கலன்களும் பங்கேற்பு!
பயிரிடப்படாமல் விடப்பட்டுள்ள வயல் காணிகளை கையகப்படுத்தும் வேலைத்திட்டம் முன்னெடுப்பு - அமைச்சர் மஹிந...