சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்த இலங்கை தீர்மானம் – மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவிப்பு!

கடன் மீள் கட்டமைப்பு, அந்நிய செலாவணி உள்ளிட்ட விடயப் பரப்பில், சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை பேச்சுவார்த்தை நடத்த தீர்மானித்துள்ளது.
இதற்காக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் அமெரிக்கா செல்ல உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறிருப்பினும், எதிர்வரும் சில நாட்களில் இலங்கை அதிகாரிகள் சர்வதேச நாணய நிதியத்துடன் முன்னெடுக்கவுள்ள கலந்துரையாடல், கடன் கோருவதற்கானதல்ல என மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் ட்விட்டர் பதிவொன்றில் குறிப்பிட்டுள்ளார்.
000
Related posts:
75 சதவீதமான ஆடைத்துறை தயாரிப்புக்கள் பிரிட்டனுக்கு ஏற்றுமதி!
கட்டடத் தேவைக்கான மணலை பெறுவதில் இழுபறி - பயனாளிகள் கவலை!
வீட்டுத்திட்ட பயனாளர் தெரிவில் முறையான பொறிமுறை வேண்டும் – வலி. வடக்கு ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தி...
|
|