75 சதவீதமான ஆடைத்துறை தயாரிப்புக்கள் பிரிட்டனுக்கு ஏற்றுமதி!
Friday, May 4th, 2018
இலங்கையிலிருந்து பிரிட்டனுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களில் 75 சதவீதமானவை ஆடைத்துறை தயாரிப்புக்களாகும் என்று அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.
இவற்றின் வர்த்தக பெறுமதி சுமார் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.
இலங்கையிலுள்ள பிரிட்டிஷ் உயர்ஸ்தானிகர் ஜேம்ஸ் ரொறிஸூடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது கைத்தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் இந்த விடயங்களை குறிப்பிட்டார்.
இதன்போது இரு தரப்பு வர்த்தக நடவடிக்கைகள் மற்றும் பொது அரசாங்க சபை, வர்த்தக சபையின் மூலமான மேம்பாட்டு நிலை குறித்து ஆராயப்பட்டது.
Related posts:
மண்டைதீவு பகுதி மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக ஈழமக்கள் ஜனநாயக கட்சி ஆராய்வு!
வாக்குகள் எண்ணும் நிலையங்களில் மின்விநியோகத்தை உறுதிப்படுத்தவும்!
யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச மருந்துக் கூட்டுத்தாபனம் மற்றும் புனர்வாழ்வு நிலையம் ஆரம்பம்!
|
|
|


