சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுக்கள் ஆரம்பம் – அடுத்த வாரம் ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதிநிதிகளும் இலங்கை வருகை!

சர்வதேச நாணய நிதியத்திற்கும் இலங்கை பிரதிநிதிகளுக்கும் இடையிலான மெய்நிகரை் கலந்துரையாடல்கள் இன்று திங்கட்கிழமை ஆரம்பமாகியுள்ளது.
இந்த கலந்துரையாடல்கள் எதிர்வரும் 23 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளதாக இலங்கையின் நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த கலந்துரையாடல்களில் நிதியமைச்சர் அலி சப்ரி, மத்திய வங்கியின் ஆளுநர் மற்றும் மத்திய வங்கியின் சிரேஷ்ட அதிகாரிகள் கலந்துகொள்ளவுள்ளனர்.
இந்த கலந்துரையாடல்களின்போது அவசர நிதி வசதிக்காக சர்வதேச நாணய நிதியத்திடம் விடுக்கப்பட்ட கோரிக்கை தொடர்பில் அதிக கவனம் செலுத்த எதிர்பார்ப்பதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை, நாட்டின் பொருளாதார நிலைமை தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதிநிதிகள் குழுவொன்று அடுத்த வாரம் இலங்கைக்கு வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
00
Related posts:
மக்களின் தேவைகளை உணர்ந்து அரசாங்கம் பொறுப்புடன் செயற்படுகிறது - அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவிப்பு!
எதிர்வரும் 20ஆம் திகதி விடுமுறை வழங்கப்படுகின்ற சகல பாடசாலைகளும் ஜூன் மாதம் 20ஆம் திகதி மீள ஆரம்பிக்...
புனரமைக்கப்பட்ட தம்புள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானம் ஜனாதிபதியினால் திறந்து வைப்பு!
|
|