சர்வதேச நாணய நிதியத்துடனான அதிகாரிகள் மட்டப் பேச்சுவார்த்தை இவ்வாரத்துக்குள் ஆரம்பம் – நிதி அமைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு!

சர்வதேச நாணய நிதியத்துடனான அதிகாரிகள் மட்டப் பேச்சுவார்த்தை இந்த வாரத்துக்குள் ஆரம்பிக்கப்படவுள்ளது.
அத்துடன் 2 மாதங்களுக்கு அதிகாரிகள் மட்ட பேச்சுவார்த்தையில் முதற்கட்ட இணக்கப்பாடு எட்டப்படும் என நிதியமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
இந்த கலந்துரையாடல்களுக்காக சர்வதேச நாணய நிதியத்தின் குழுவொன்று இலங்கை வரவுள்ளது. அத்துடன் சில கலந்துரையாடல்கள் இணையம் ஊடாகவும் இடம்பெறவுள்ளதாகவும் நிதியமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். முன்பதாக சர்வதேச நாணய நிதியத்துடனான கலந்துரையாடல் இரண்டு மாதங்களுக்குள் வெற்றியளிக்கும் என மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க அண்மையில் நம்பிக்கை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது
Related posts:
சிங்கப்பூர் - இலங்கை வர்த்தக உடன்படிக்கை - அமைச்சர் மலிக் சமரவிக்கிரம!
சிவப்பு பட்டியலில் இருந்து இலங்கையை நீக்கியது பஹ்ரைன் – நாளைமுதல் நடைமுறைக்கு வருவதாகவும் அறிவிப்பு!
டிஜிட்டல் பிறப்புச் சான்றிதழை துரிதமாக வெளியிட நடவடிக்கை - இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த தெரிவிப்ப...
|
|