சர்வதேச நாணய நிதியத்தின் குழு இன்று யாழ்ப்பாணம் வருகை!
Sunday, January 14th, 2024
இலங்கைக்கு வருகைதந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் குழு இன்று யாழ்ப்பாணத்துக்கு வருகைதந்துள்ளது
இந்நிலையில் வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் உள்ளிட்ட பல தரப்பினருடனும் நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் சந்திப்பில் ஈடுபடவுள்ளனர்.
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் சந்திப்பில் ஈடுபட்டது.
முன்பதாக அடுத்தகட்ட கடன் பெறுகைகள் தொடர்பில் தற்போது முன்னெடுப்புக்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த நிலையிலேயே இலங்கைக்கான பயணத்தின் ஒரு பகுதியாக நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் யாழ்ப்பாணத்துக்கு பயணம் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
மீனவர்கள் பிரச்சினை தொடர்பாக ஆராய்வு!
பல்கலை கல்வியை கைவிட்டவர்கள் மீண்டும் தொடர்வதற்கு விண்ணப்பம் கோரல்!
கலை பட்டதாரிகளின் வேலைவாய்ப்பு இன்மை தொடர்பான விசேட கலந்துரையாடல்!
|
|
|


