குடிநீருக்கு உலைவைத்து தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கு உள்ளுராட்சி தேர்தலில் மக்கள் தகுந்த பாடம் புகட்ட வேண்டும் – ஈ.பி.டி.பி வேட்பாளர் புவி!

Friday, January 26th, 2018

தீவக மக்களின் குடிநீருக்கு உலைவைத்து அதை தடுத்து நிறுத்திய தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கு நடைபெறவுள்ள உள்ளுராட்சிச் சபைத் தேர்தலில் மக்களாகிய நாம் தகுந்த பாடம் புகட்ட வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊர்காவற்றுறை வேட்பாளர் புவி தெரிவித்துள்ளார்.

ஊர்காவற்துரை ஒலுவில் பகுதியில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்ற பரப்புரை கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஆவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த காலங்களில் எமது மக்கள் ஒன்றிணைந்து ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வெற்றியை பிரதேச சபைத் தேர்தலில் உறுதிப்படுத்தியதனால்தான் இவ்வளவு முன்னேற்றங்களை கண்டுள்ளோம்.

அந்த வகையில் நடைபெறவுள்ள உள்ளுராட்சிச் சபைத் தேர்தலில் கட்சியின் வெற்றியை உறுதிப்படுத்தும் பட்சத்தில் நிச்சயம் எமது பகுதி மேலும் அபிவிருத்தியில் முன்னேற்றம் காணும்.

தீவக மக்களின் தீராப் பிரச்சினையாக குடிநீர்ப் பிரச்சினையே காணப்படுகின்றது. இப் பிரச்சினைக்கு இரணைமடு குளத்தினூடாக குடிநீரைக் கொண்டு வந்து குடிநீர் பிரச்சினைக்குத் தீர்வு காண டக்ளஸ் தேவானந்தா முயற்சித்த போது அத்திட்டத்தை தமது சயநலன்களுக்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தடுத்து நிறுத்தியிருந்தனர்.

இதன் காரணமாகத்தான் தீவக மக்கள் இன்றும் குடிநீரைப் பெற்றுக்கொள்ள முடியாது அவல நிலையில் வாழ்ந்து வருகின்றனர். நடைபெறவுள்ளத் தேர்தலில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியாகிய நாம் வெற்றிபெறும் பட்சத்தில் உவர்நீரை நன்னீராக்கி குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண முழுமையான முயற்சிகளை  முன்னெடுப்போமட் என்றும் புவி சுட்டிக்காட்டினார்.

இதன்போது கருத்து தெரிவித்த செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, சாதித்த எமது கரங்களை மக்களின் ஒன்றிணைந்த ஆதரவுடன் பலப்படுத்தும் போது நிச்சயம் உங்களது வாழ்வு எழுச்சியனுடன் கூடியதான மாற்றம் காணும் என தெரிவித்தார்.

Related posts: