போரா சமூகத்தின் ஆன்மீகத் தலைவர் – ஜனாதிபதி ரணில் சந்திப்பு – ஜனாதிபதி நடைமுறைப்படுத்தியுள்ள வேலைத்திட்டங்களுக்கும் பாராட்டு!

Monday, March 4th, 2024

போரா சமூகத்தின் ஆன்மீகத் தலைவர் கலாநிதி செய்யதினா முஃபத்தல் செய்புதீன் சாஹிப்புக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று பிற்பகல் இந்த சந்திப்பு இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

போரா சமூகத்தின் ஒரு மில்லியனுக்கும் அதிகமான உறுப்பினர்கள் இந்தியா, பாகிஸ்தான், அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, இலங்கை, அவுஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகளில் வசித்து வருகின்றனர்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் சிநேகபூர்வ உரையாடலில் ஈடுபட்ட கலாநிதி செய்யதினா முஃபத்தல் செய்புதீன், இலங்கையின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப ஜனாதிபதி நடைமுறைப்படுத்தியுள்ள வேலைத்திட்டத்தைப் பாராட்டியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், பம்பலப்பிட்டி போரா பள்ளிவாசலை அண்டியதாக இந்தவருடம் நடத்தப்படவுள்ள போரா மாநாடு தொடர்பிலும் இதன்போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

கடந்த 4 வருடங்களாக போரா சமூகத்தினர் ஆற்றிய சமய சேவைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் அடங்கிய புத்தகமும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: