சர்வதேச நாணய நிதியத்திடம் பிணையெடுப்பிற்கான மதிப்பாய்வில் இலங்கை தெரிவாகும் சாத்தியம் அதிகரிப்பு!

Thursday, July 20th, 2023

சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து 3 பில்லியன் அமெரிக்க டொலர் பிணையெடுப்பை பெற்றுக்கொள்வதற்கான முதல் மதிப்பாய்வில் இலங்கை தெரிவாவதற்கான அதிக வாய்ப்புகள் உள்ளதாக ப்ளும்பேர்க் செய்தி வெளியிட்டுள்ளது.

அந்நிய செலாவணி கையிருப்பின் அதிகரிப்பு மற்றும் வட்டி விகிதங்களில் ஏற்பட்ட வீழ்ச்சி ஆகியனவற்றின் அடிப்படையில் இலங்கை குறித்த மதிப்பாய்வில் சிறந்த பெறுபேற்றை அடையகூடிய வாய்ப்புள்ளதாக சர்வதே நாணய நிதிய நிறைவேற்று குழுவின் இலங்கைக்கான பிரதிநிதி கிரிஸ்ணமூர்த்தி சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதிய நிபந்தனைகளுக்கு ஏற்பட கடன் நிலைத்தன்மையை அடைவதற்கு இலங்கை முன்னெடுத்து வரும் செயற்பாடுகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் இது தமது தனிப்பட்ட கருத்து என்பதுடன், நிறைவேற்று குழுவின் ஒட்டுமொத்த கருத்தாக கருத முடியாது எனவும் சர்வதேச நாணய நிதிய நிறைவேற்று குழுவின் இலங்கைக்கான பிரதிநிதி கிரிஸ்ணமூர்த்தி சுப்ரமணியன் ப்ளும்பேர்க்கிற்கு தெரிவித்துள்ளார்.

நிறைவேற்று சபையில், 24 உறுப்பினர்கள் உள்ள நிலையில், பெரும்பாலான ஆதரவு கிடைக்கும் சந்தர்ப்பத்திலேயே இலங்கைக்கு பிணையெடுப்புக்கான வாய்ப்பு கிட்டும் என்பது குறிப்பிடத்தக்கது

000

Related posts:

யாழ்ப்பாணச் சமுர்த்திப் பயனாளிகளில் அரைவாசிப் பேர் அதை இழக்கும் நிலை : புதியவர்களை இணைத்துக் கொள்ளத்...
தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமை தொடர்பில் சீர்த்திருத்தங்கள் குறித்த முன்மொழிவுகளை சமர்ப்பி...
வங்காள விரிகுடாவில் காற்றழுத்தம் – 27 ஆம் திகதிமுதல் டிசம்பர் 03 வரை வடக்கு கிழக்கில் அதிக மழை பெய்ய...