சுகாதார சேவைகளின் அபிவிருத்திக்கு 23 புதிய வெளிநாட்டு முதலீடுகள் – அமைச்சர் ராஜித்த!

Thursday, March 16th, 2017

நாட்டின் சுகாதார சேவையின் அபிவிருத்திக்காக 23 புதிய வெளிநாட்டு முதலீடுகள் கிடைத்திருப்பதாக சுகாதார போசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

இந்த புதிய முதலீடுகள் மூலம் புதிய வைத்தியசாலைகள் அமைக்கப்படவுள்ளதோடு, வைத்தியசாலைகளை மறுசீரமைக்கவும் , மருந்துகளை உற்பத்தி செய்யவும் சத்திரசிகிச்சை உபகரணங்களை தயாரிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக சுட்டிக்காட்டினார்.

இலகு தவணை முறையில் சுகாதார சேவைக்கு தேவையான உபகரணங்களை வழங்க மலேசிய நிறுவனம் ஒன்று இணக்கம் தெரிவித்துள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டார்.சீனாவின் மிகப் பெரிய மருந்து உற்பத்தி நிறுவனம் இலங்கையில் சத்திரசிகிச்சை உபகரணங்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை ஒன்றை அமைக்கவும் இதன்போது கலந்துரையாடப்பட்டதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Related posts: