சர்ச்சைக்குரிய பல பிரேதப் பரிசோதனைகளை மேற்கொண்ட அதிகாரி ரூ ஹுல் ஹக்கை கட்டாய விடுமுறையில் அனுப்புவதற்கு சுகாதார அமைச்சு நடவடிக்கை!

Saturday, August 19th, 2023

சர்ச்சைக்குரிய பல பிரேதப் பரிசோதனைகளை மேற்கொண்டதற்காக பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ள கொழும்பு சட்ட வைத்திய அதிகாரி ரூ ஹுல் ஹக்கை கட்டாய விடுமுறையில் அனுப்புவதற்கு சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலை சிறுநீரக அறுவை சிகிச்சைக்கு பின்னர், உயிரிழந்த மூன்று வயது சிறுவனின் பிரேத பரிசோதனை மற்றும் வர்த்தகர் தினேஷ் ஷாஃப்டரின் பிரேத பரிசோதனைகளை அவர் மேற்கொண்டிருந்தார்.

இலங்கை மருத்துவ சபையினால் பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில், அவர் இந்த பிரேத பரிசோதனைகளை முன்னெடுத்திருந்தாக முன்னதாக தெரிவிக்கப்பட்டது

அத்தோடு, கடந்த வருடம் டிசம்பர் மாதம், அவர் பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டதாக இலங்கை மருத்துவ சபையின் தலைவர் பேராசிரியர் வஜிர திஸாநாயக்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: