சம்பளம், ஓய்வூதியம் மற்றும் சமுர்த்தி கொடுப்பனவுகளை வழங்குவதற்கு அரசின் நிதி போதுமானதாக உள்ளது – தேர்தலுக்கு இது பொருத்தமான நேரமல்ல – நிதியமைச்சின் பேச்சாளர் தெரிவிப்பு!

அரச பணியாளர்களின் சம்பளம், ஓய்வூதியம் மற்றும் சமுர்த்தி கொடுப்பனவுகளை வழங்குவதற்கு அரசின் நிதி போதுமானதாக உள்ளபோதிலும், அதனைக் கொண்டு தேர்தலை நடத்துவது என்பது முடியாத காரியம் என நிதியமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
நாட்டின் பொருளாதாரத்தை படிப்படியாக மீட்டெடுக்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நடவடிக்கைகளின் முடிவுகள் 2023 மார்ச்சில் வெளிப்படும். எனவே, இந்த நேரத்தில் தேர்தலுக்கு நிதி ஒதுக்கப்பட்டால் பொருளாதாரம் மேலும் பாதிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
அரச ஊழியர்களின் சம்பளத்திற்காக 93,000 மில்லியன் ரூபாவும், ஓய்வூதியத்திற்காக 26,500 மில்லியன் ரூபாவும், சமுர்த்தி கொடுப்பனவுகளுக்காக 6,000 மில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும் முப்படைகளின் நலனுக்காக 2000 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட வேண்டும். ஏனைய சமூக பாதுகாப்பு நோக்கங்களுக்காக மேலும் 3,500 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
2023 மார்ச் மாதத்திற்குள் சர்வதேச நாணய நிதியத்தின் உதவி கிடைத்தால் மட்டுமே பொருளாதாரம் நிலைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
|
|