சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி சட்டமூலத்தை திருத்த அமைச்சரவை அனுமதி!

Tuesday, January 31st, 2023

சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரிச் சட்டமூலத்தை திருத்துவதற்கு அமைச்சரவையினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

2022 ஆம் ஆண்டின் 25ஆம் இலக்க சமூகப் பாதுகாப்பு பங்களிப்பு வரிச் சட்டத்தின் கீழ், வருடாந்தம் 120 மில்லியனுக்கும் அதிகமான வருமானம் ஈட்டும் நபர்கள் மீது 2.5 வீத சமூக பாதுகாப்பு வரி விதிக்கப்படுகின்றது.

சில ஏற்றுமதியாளர்கள் மற்றும் மிகச் சிறிய இலாபத்தில் அந்நிய செலாவணி ஈடுபடுபவர்கள், 2.5 வீத வரித் தொகையை செலுத்தினால், அவர்களால் தொழில் நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்ல முடியாது என அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இன்று (31) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் அமைச்சர் இதனை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

Related posts: