சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி நடைமுறை – இன்று நள்ளிரவுமுதல் தொலைபேசி கட்டணங்களில் திருத்தம்!
Wednesday, October 5th, 2022
இன்று (5) நள்ளிரவுமுதல் அமுலாகும் வகையில் தங்கள் கட்டணங்களில் திருத்த மேற்கொள்ள அனைத்து தொலைதொடர்பு சேவை வழங்கல் நிறுவனங்களும் தீர்மானித்துள்ளன.
கடந்த முதலாம் திகதிமுதல் சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி (SSCL) நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதன் காரணமாக இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தொலைதொடர்பு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
புதிய வரி 2.5% ஐ சேர்க்கும்போது, தொலைக்காட்சி சேவைகள், முற்கொடுப்பனவு மற்றும் பிற்கொடுப்பனவு கட்டணப் பொதிகள் திருத்தப்பட்டுவதாக நிறுவனங்கள் அறிவித்தன.
புதிய கட்டண விபரங்கள் தத்தமது அதிகாரப்பூர்வ இணையதளங்களில் வெளியிடப்படும் என்றும் தொலைதொடர்பு சேவை வழங்குநர்கள் அறிவித்துள்ளனர்.
000
Related posts:
ஏ.டி.எம் இயந்திரத்தை உடைத்த கொள்ளையர்ககள் பொலிஸாரால் கைது!
நாட்டின் எழுத்தறிவு வீதத்தை 100% நோக்கி உயர்த்துவதுடன் அதற்கு அப்பாலும் சென்று புதுமைகள் படைக்கவேண்ட...
நாடு முழுவதிலும் சுமார் 600 போலி சாரதி பயிற்சி நிலையங்கள் - மோட்டார் போக்குவரத்து திணைக்களம் எச்சரி...
|
|
|


