சமூக ஊடகங்களைக் கையாள்வதற்காக நான்கு பேர் கொண்ட உயர்மட்டக் குழு – ஜனாதிபதி ரணில் நியமித்துள்ளதாக தகவல்!

Sunday, June 16th, 2024

பிரதான ஊடகங்களைத் தவிர்த்து சமூக ஊடகங்களைக் கையாள்வதற்காக நான்கு பேர் கொண்ட உயர்மட்டக் குழு ஒன்றை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நியமித்துள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது

இது ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான அனைத்து விடயங்களையும் கவனிக்கும் உச்ச அமைப்பாக செயற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

பிரதமர் தினேஸ் குணவர்தன தலைமையில் ஜனாதிபதி செயலகத்தின் பிரதானி சாகல ரத்நாயக்க மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை  பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா ஆகியோர் இந்தக் குழுவில் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

முன்னதாக பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரான பசில் ராஜபக்சவும் இந்தக்குழுவின் உறுப்பினராக நியமிக்கப்பட்டார். இருப்பினும், அவர் குழுவில் பணியாற்ற மறுத்துவிட்டார் என்று தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: