வேலை நேர மாற்றத்தால் அலுவலகங்களின் சேவைகளுக்கு பாதிப்பில்லை!

Tuesday, June 6th, 2017

பத்தரமுல்ல பிரதேச அரச அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியர்களது வேலை நேரத்தில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டபோதிலும் , அது அலுவலகங்களின் சேவைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது என்று ஆட்பதிவு திணைக்களமும், குடிவரவு குடியகல்வு திணைக்களமும் அறிவித்துள்ளன.

இந்த நிறுவனங்களில் ஒரு நாள் சேவையை பெற காலை ஏழு மணி தொடக்கம் மக்கள் வருகின்றார்கள். இத்தோடு இந்த சேவை மாலை ஆறு மணியுடன் முடிவடைகிறது. இந்தப்பணிகன் எதிர்காலத்திலும் வழமை போல் இடம்பெறும் என ஆட்பதிவு ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக்க தெரிவித்தார்.இதுதொடர்பில் குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நிஹால் ரணசிங்க இவ்வாறே கருத்தை குறிப்பிட்டார்.

பத்தரமுல்ல பிரதேசத்தில் இயக்கம் அரச அலுவலங்களில் ஊழியர்களுக்கு வசதியான வேலை நேரத்தை அமுலாக்குவது தொடர்பான யோசனையை அமைச்சரவை அங்கீகரித்துள்ளது. இதற்கமைவாக பிரதேச அரச அலுவலகங்களின் ஊழியர்களுக்கு வசதியான வேலைநேர மாற்றம் அடுத்த மாதம் முதலாம் திகதி தொடக்கவுள்ளது இது குறித்து ஆட்பதிவு ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக்க மற்றும் குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நிஹால் ரணசிங்க ஆகியோர் இந்த விடயங்களை குறிப்பிட்டனர்இந்தப் பிரதேசத்தில் நெருக்கடியான நேரங்களில் நிலவும் வாகன நெரிசலை கருத்திற் கொண்டு அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க இதற்கான ஆலோசணையை முன்வைத்திருந்தார்.இது தொடர்பான சுற்றறிக்கையை பெருநகர மற்றும் மேற்கு அபிவிருத்தி அமைச்சின் செயலாளரது அங்கீகாரத்திற்காக அனுப்பி வைத்துள்ளதாக பொது நிர்வாக அமைச்சு அறிவித்துள்ளது.

அவரது அங்கீகாரம் கிடைத்ததும் உரிய நேர விபரங்களுடன் சுற்றறிக்கை வெளியிடப்படும். இதனை அடுத்த மாதம் முதலாம் திகதி தொடக்கம் அமுலாக்கக் கூடியதாக இருக்கும் என பொது நிர்வாக அமைச்சின் ஸ்தாபன பணிப்பாளர் நாயகம் டப்ளியு டி.சோமதாஸ தெரிவித்தார்.

Related posts: