சமிக்ஞை விளக்குகளை பாதுகாக்க மின் கம்பங்கள்!

வீதி சமிக்ஞை விளக்குகளை பாதுகாக்கும் முகமாக பாதுகாப்பு மின் கம்பங்கள் நடப்படவுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்தது.
யாழ் நகரில் சத்திர சந்தி, ஆனைப்பந்தி வீதி சந்தி மற்றும் கோப்பாய் சந்தி போன்ற பகுதிகளில் உள்ள வீதி விளக்குகள் சமிக்ஞை கம்பங்கள் அடிக்கடி கனரக வாகனங்களால் முட்டி மோதி சேதப்படுத்தப்பட்டு வருகின்றன.
இதனை அடுத்து பாதுகாப்பு கம்பங்கள் அமைக்கப்படவுள்ளதுடன் இந்த சந்தி பகுதியில் சமிக்ஞை விளக்குகளை அண்டி வீதி குறியீட்டு கோடுகளும் வரையப்பட்டு வருகின்றன.
Related posts:
மீன்பிடி படகுகள் பதிவு ஆரம்பம்!
நல்லூர் நிர்வாகி இரகுநாத குமாரதாஸ் மாப்பாண முதலியார் உயிரிழப்பு!
நான் இன்னும் பாலத்தின் நுழைவாயிலில் நிற்கிறேன் - எந்தப் பக்கத்தில் நிற்கிறேன் என்று தெரியவில்லை – பி...
|
|