சமாதான நீதவான் பதவிகள் மேலும் 350 பேருக்கு வழங்க நடவடிக்கை!

Tuesday, August 30th, 2016

சமூக சேவையில் ஈடுபட்டுள்ள சமூக சேவையாளர்கள் 350 பேருக்கு சமாதான நீதவான் பதவிகள் வழங்குவதற்கு நீதி அமைச்சு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய நீதி அமைச்சினால் தெரிவு செய்யப்பட்டுள்ள 350 சமூக சேவையாளர்களுக்கும் நாளைய தினம் இந்தப் பதவிகள் வழங்கப்படவுள்ளதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.பதவி வழங்கும் நிகழ்வு புத்தசாசன அமைச்சில் நாளைய தினம் நடைபெறும் என்றும் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

Related posts: