சமகால அரசாங்கம் பதவி வகித்த காலங்களில் எப்பொழுதுமே வட கிழக்கு அபிவிருத்தியை கைவிட்டதில்லை – அமைச்சர் நாமல் தெரிவிப்பு!

சமகால அரசாங்கம் பதவி வகித்த காலங்களில் எப்பொழுதுமே வட கிழக்கு அபிவிருத்தியை கைவிட்டதில்லை. எதிர்வரும் காலங்களிலும் எமது அபிவிருத்தி திட்டங்களை அந்தப் பகுதிகளில் தொடர்ந்தும் முன்னெடுப்போம் என்று அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையிலான அரசாங்க காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட பெருந்தெருக்கள் அபிவிருத்தித்திட்டம் கடந்த அரசாங்க காலத்தில் இடைநிறுத்தப்பட்டது.
இதனால்தான் வீதி அபிவிருத்தியில் தாமதம் ஏற்பட்டது. அதேவேளை அரசாங்கம் என்ற வகையில் வடக்கு கிழக்கு உள்ளிட்ட எல்லா வீதிகளையும் அபிவிருத்தி செய்வதே எமது கொள்ளை.
ஒரு இலட்சம் கிலோ மீட்டர் வீதித்திட்டம் தற்போது நடைமுறைப்படுத்தப்படுகின்றது. அத்துடன் குறைகள் தொடர்பாக விடயங்களை அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டுவாருங்கள் என்றும் அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் உரையாற்றிய போது சுட்டிக்காட்டிய குறைபாடுகளுக்கு அமைச்சர் நாமல் ராஜபக்ச பதில் அளித்த போதே இவ்வாறு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|