அமுலில் உள்ள 18 சதவீத வற் வரியை எதிர்வரும் ஏப்ரல் மாதம்முதல் 3 வீதத்தால் குறைக்க அரசாங்கம் தீர்மானம்!
Sunday, March 17th, 2024
இலங்கையில் தற்போது அமுலில் உள்ள 18 சதவீத வற் வரியை எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் 3 வீதத்தால் குறைக்கப்படும் என செய்திகள் வெளியாகியுள்ளன..
மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் எதிர்காலத்தில் வற் வரியை 15 சதவீதமாக பேணுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரியவருகிறது.
கடந்த காலத்தில் 12 சதவீதமாக இருந்த வற் வரி, சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரையின்படி 18 சதவீதமாக உயர்த்தப்பட்டது.
எவ்வாறாயினும், வற் வீதம் 3 சதவீதம் குறைக்கப்பட்டால், வருடாந்த வற் வரி வருமானம் சுமார் 300 பில்லியன் ரூபாவால் குறையும் என நிதியமைச்சு தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
நிரந்தர நியமனம் கோரி தொண்டர் ஆசிரியர்கள் உண்ணாவிரதம்!
யாழ் வரும் ஜனாதிபதியை சந்திக்க ஏற்பாடு செய்யுமாறு மாணவர்கள் கோரிக்கை!
மாநகர சபையின் நிபந்தனையை மீறிச் செயற்பட்ட சிற்றங்காடிகள் இரண்டுக்கு எதிராக நடவடிக்கை!
|
|
|


